ஏதாவது பேசியிருக்கலாமே?

காலையில் மழை பெய்து கொண்டிருந்ததால், தன் குடையை விரித்தபடி வேகமாகச் சென்றாள் மாலா. தரை ஈரமாக இருந்ததால் கிழே பார்த்து நடந்து கொண்டிருந்தாள். சாலைக்கு செல்வதற்கு சிறு படிகட்டில் இறங்க சென்றபோது மின்னல் வேகத்தில் இரு கைகளிலும் ஒரு ஜோடி காலணிகளுடன் ஒரு பெண் மாலாவுக்கு முன்னாள் வந்து, அதே படிகாட்டுகளில் இறங்கினாள். இறங்கியவள் கண்களில் அனல்பொறி பறக்க இரண்டு காலணிகளையும் அங்கு நின்று கொண்டிருந்தவன் முகத்திற்கு நேரே அடித்து, “நீ ஏன் கிழே இறங்கி வந்தாய்? உன் அம்மா என்னைத் திட்ட திட்ட நீ எனக்காகப் பரிந்து ஒரு வார்த்தைக் கூட பதிலுக்குச் சொல்லவில்லை,” என்று தொண்டை கிழிய கத்தினாள்.

 

இதைச் சட்ட்ரும் எதிர்பாராத மாலா, இரத்தம் உறைந்தது போல் சிலையாய் ஒருகணம் நின்றுவிட்டாள். மறுகணம் சுதாரித்துக் கொண்டு பார்க்கும் போதுதான் தெரிந்தது, அங்கு நின்று கொண்டிருந்தவன் லெட்சுமியம்மாளின் மகன் சங்கர் என்று. சங்கர் அமைதியானவன், தன தாய் மீதும் தம்பி மீதும் பாசமும் பொறுப்புமுள்ளவன்.

 

மாலாவும் லெட்சுமியம்மாளும் ஈரச் சண்டையில் அவ்வப்பொழுது சந்திக்கும் தோழிகள். மாலா நன்கு படித்தவள். வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தை விட்டு யிஷுனுக்கு குடியேறியவள். லெட்சுமியம்மாளோ, முன்பு செம்பவாங் நேவல் பேஸ் வட்டாரத்திலிருந்து யிஷுனுக்குக் குடியேறியவர்.

 

லெட்சுமியின் பெற்றோர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பிழைக்க வந்தவர்கள். அதிகப் படிப்பு இல்லாததால் அப்போதைக்கு பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு வேலை செய்து வாழ்ந்து வந்தனர். ஆம், அப்போது நேவல் பேஸ் என்று சொல்லக் கூடிய கப்பல்கள் வந்து அணையும் இடம் அது. வெள்ளையர்களுக்கு வேலை செய்பவர்களுக்கு அங்கு ‘குவாட்ரஸ்’ என்று சொல்லக் கூடிய வீடுகள் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு லெட்சுமியம்மாள் வாழ்ந்திருந்தாலும், அவ்வட்டாரத்தைச் சுற்றி கிராமப் பகுதியில் மக்களும் வாழ்ந்து வந்தனர்.

 

அப்பொழுதெல்லாம் வீடுகள் அருகேயும், ஒரே வரிசையில் பல வீடுகள் இருக்கும் வகையில்தான் இருந்தன. அங்கு வாழ்ந்தவர்கள் காலையில் திறக்கும் வீட்டுக் கதவு இரவு உறங்கச் செல்வதற்கு முன்தான் மூடப்படும். ஒரு நாளில் ஒரு குடும்பத்தில் நடைப்பெறும் நல்லது கெட்டது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு உடனே தெரிந்துவிடும்.

 

நல்லது நடந்தால் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். தீயது ஏதாவது நடந்தால் கேட்காமலே சுற்றுப் புறத்தில் உள்ளவர்கள் உதவிக்கு ஓடி வந்து விடுவார்கள். உப்பு, பருப்பு, சீனி தீர்ந்து விட்டால், ஒரு கரண்டி பக்கத்து வீட்டில் கேட்டு வாங்கி பயன்படுத்தி பொழுதைக் கழித்து வாழ்ந்து வந்த சூழலில் வாழ்ந்தவர்தான் லேட்சுமியியம்மாள்.

 

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று நாடு முன்னேற ஆரம்பித்தது. அதில் ஒன்று தான் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் என்று அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒன்று. அதில் ஒன்றுதான் மருகுடியமைப்புப் பேட்டை என்பது. ஆம், நேவல் பேஸ்லில் கிராமப் பகுதியில் சரியான வீடு, நீர், மருத்துவமனை, சந்தை மற்றும் கடை வசதி இல்லாதவர்களை யிஷுன் என்ற புதிய நகரத்திற்கு குடியேற சொன்னது அரசாங்கம்.

 

அன்பு, பாசம் கொண்ட அண்டைவீட்டார், மரங்கள், செடிகள் சூழ்ந்த குளுமையான பகுதியை விட்டு லெட்சுமியம்மாளும் யிஷுன் வட்டாரத்தில் குடியேறினார். ஆரம்பத்தில் அசதி தீர குடிக்க ஆரம்பித்த அவருடைய கணவர், குடித்தால்தான் அசந்து உறங்க முடியும் என்ற நிலைக்கு வந்து குடித்தார். அதனாலே அவருடைய வருமானமும் வாழ்க்கைக்கு போதவில்லை. புது அடுக்கு மாடி வீட்டுக்குக் குடி வந்த மூன்று மாத காலத்திலேயே அவருடைய கணவர் உடல் நலமின்றி, காலனுக்குப் பலியானார்.

 

அப்பொழுது அழுது புலம்பித் தீர்க்க முன்பிருந்த தன் தோழிகள், அண்டை வீட்டுக்காரர்கள் யாரும் இல்லாததை எண்ணி அதிகம் கவலையுற்றார். முன்பு அவர் வாழ்ந்த சூழல், திறந்த வீட்டின் கதவு திறந்தபடியே இருந்து மூட இரவாகிவிடும். ஆனால், இப்பொழுது அவள் வாழும் சூழல் மூடியிருக்கும் கதவை யாரும் திறந்து வைக்க மாட்டார்களா என்று எதிர்ப்பார்க்கும் அளவுக்கு உள்ளது.

 

பல இன்னல்களுக்கு இடையே தன் இரு மகன்களையும் வளர்த்து ஆளாக்கி உயர்த்திவிட்டார். சங்கரும் வளர்ந்து விட்டான். தன மகன் வாழ்வு நன்றாய் அமைய வேண்டும் என்பதற்காகவே அவன் விரும்பிய பெண்ணை மணம் முடித்து வைத்தார். அவள் நன்கு படித்தவள். சங்கருக்கு ஈடாக பொருளீட்டும் நிலையில் பணிப்புரிபவள்.

 

சில ஆண்டுகள் உருண்டோடின. வயதான தாயைத் தன்னோடு வைத்திருக்க எண்ணினான் சங்கர். அவனுடைய மனைவியோ, கொஞ்சம் சுகமாக வாழ எண்ணி, முதியோர் இல்லத்தில் விட எண்ணினாள். அதையொட்டி அமைந்த வாக்குவாதம்தான் அன்று காலையில் தாயையும் தாரத்தையும் இழக்க விரும்பாததால் எதுவும் பேசாது கிழே இறங்கியிருக்கிறான் சங்கர். தன மனையை அவளுடைய வேலை இடத்திற்கு அனுப்பிவிட்டு அவனுடைய வேலையிடத்திற்குப் போய் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவசர அவசரமாய் ஓடி வந்தான், தன் தாயுடன் பேசி சமாதானம் செய்ய.

 

லெட்சுமியம்மாள் வாசலையே பார்த்தபடி அமர்த்திருந்தார். சங்கர் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான். தாயிடம் மன்னிப்புக் கேட்டு பேசினான். கவலைப்படாதம்மா, நான் உன்னை கை விட மாட்டேன்மா என்று காலையில் பேசத் தவரியதை எல்லாம் அப்பொழுது பேசினான். பதிலுக்கு லெட்சுமியம்மாளும் பேசினார்.

 

“சரி சங்கர், அடுத்த சனிக்கிழமை என்னை வந்து பார்ப்பாய் தானே? மறக்காமல் வருவாய் அல்லவா? வேலை இருக்கிறது என்று வராம இருக்க மாட்டாய் அல்லவா? ஸ்ரீ நாராயண மிஸ்சியன் முதியோர் இல்லத்திலே என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க.” ஆம், இதைத் தான் மீண்டும் மீண்டும் கூறினார் லெட்சுமியம்மாள். அவருடைய மனநிலை அப்படியாகிவிட்டது!

 

“அய்யோ, அம்மா! காலையில் நான் ஒன்றுமே பேசாமல் போனது தப்பு தான் அம்மா! என்னை மன்னித்து விடு அம்மா!” என்று தன் தாய் மடியில் தலை வைத்து கதறினான் சங்கர்.

 

Habibah

As for You Could Have Said Something, Habibah narrates a story about a son who realizes the true meaning of filial piety from his mother.

Advertisements