பிள்ளையார்

 

அன்று நான், என் மகன் மற்றும் மனைவியுடன் “டேங் ரோடு” முருகன் கோயிலுக்குச் சென்றேன். கோயிலுக்கு செல்லும் போது என் மகன் கோயிலில் வெளிபுரக்க கதவுகளில் இருக்கும் மணிகளைஆட்டி விட்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அவனுக்கு தேவார வகுப்பு அன்று அதனால் அவனை அழைத்துச் சென்றோம்.

 

சாமி தரிசனம் முடிந்தவுடன், ஆலய மண்டபத்தில் நடக்கும் வகுப்புக்கு அவன் சென்றான். அங்கே பாடம் எடுக்கும் ஓதுவாருடன் என் மகன் வயதுள்ள பத்துக் குழந்தைகள் இருந்தன. நானும் என் மனைவியும் சிறு தூரத்தில் அமர்ந்து நடப்பவைகளை பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

முதலில் ஓதுவார் விநாயகத்துதிப்பாடலுடன் வகுப்பை துவங்கினார்.

 

“குள்ளக் குள்ளரே

குண்டு வயிரரே

வெள்ளைப் பிள்ளையாரே

விக்னேஷ்வரரே”

 

எல்லாக் குழந்தைகளும் திரும்பக் கூறினார். அடுத்து…

 

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்துணக்கு நான் தருவேன்

கோலஞ்செய் துங்கக்கரிமுகத்து தூமணியே

நீ எனக்கு சங்கத் தமிழ் முன்றும் தா”

 

என்று ஓதுவர் பாடினார். குழந்தைகள் திரும்பக் கூறினார்.

 

அடுத்து அவர் தேவாரப்பாடல்களை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பாடல்களின் பொருள் கூறி, எப்படி உச்சரித்துப் பாடுவது என்று சொல்லிக் கொடுத்தார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து வகுப்பு முடிந்தது.மகனும் நண்பர்களுடன் சிறிது நேரம் அளவளாவிட்டு எங்களிடம் வந்தான்.

 

நாங்கள் மூவரும் வீட்டுக்குக் கிளம்பினோம். நடந்து செல்லும் போது என் மகன் என்னிடம் “அப்பா,குள்ளக் குள்ளரே பாட்டில் ஓதுவார் ஜயா வெள்ளைப் பிள்ளையாரே என்று சொன்னார். ஆன பிள்ளையார் எல்லாம் கறுப்பு தானே அப்பா? பின்னே வெள்ளை எங்கிருந்து வந்தது? “ என்று கேட்டான்.

 

தான் சற்று நிதானித்தேன். யோசித்து பார்த்தேன். பையன் வெல்லுவது சரி என்றே பட்டது.

“நாமே பாட்டை மாற்றிவிடுவோமே?

குள்ளக் குள்ளரே

குண்டு வயிரரே

கரும் கறுப்பும் பிள்ளையாரே

விக்னேஷ்வரரே இது எப்படி இருக்கு ”

 

என்று மகனிடம் கேட்டேன். “இது தான் அப்பா சரி” மகிழ்ந்தான் என் மகன்.

 

“அப்புறம் பாலும் தெளிதேனும் “பாட்டில் ஔவையார் நாலும் தருவேன் என்று சொன்னார்கள்.எல்லோருமே அதையே தான் பாடுகிறோம். யாராவது அந்த நாலையும் கொடுத்திருக்கோமா ? கொடுக்காத போது சங்கத் தமிழ் மூன்றும் எப்படி வரும்” என்று மறுபடிறும் கேட்டான்.

 

மகனின் அறிவு எள்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது உள்ள குழந்தைகள் அதிபுத்திசாலிதனமாக சிந்திக்கிறார்கள்.

 

“நாம் வீட்டிற்கு சென்றவுடன் இந்த நாலையும் வைத்து வேண்டுவோம் என்றேன். வீட்டில் பிள்ளையார் முன், பால், தெளிய தேன், பாகு மற்றும் பருப்பு வைத்து நாங்கள் மூவரும்

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்

இவை நாலும் கலந்துணக்கு நான் தருவேன்

கோலஞ்செய் துங்கக்கரிமுகத்து தூமணியே

நீ எனக்கு சங்கத் தமிழ் முன்றும் தா”

என்று பாடினோம்.

 

Thirunavukkarasu

Thirunavukkarasu recalls a parent who learns about exercising his religious faith from his son as they sing hymns at a temple to the deity, Pillaiyaar.

Advertisements