மேன்மை

  Thirunavukkarasu

காட்சி : பேருந்து எண் 64ல்

இருப்போர் : கண்ணன்-பேருந்து ஓட்டுநர், பாலா. சில ஜப்பானியப் பெண்கள்

கண்ணன் : வணக்கம் பாலா ஏப்படி இருக்கீங்க ?

 

பாலா : நல்ல இருக்கேன் சார், நீங்க ?

 

கண்ணன் : நான் இருக்கிறேன். என்ன அந்த Routeல உங்களை கொஞ்ச நாளா ஆளைக் காணோம் ?

 

பாலா : நான் வர நேரம் நீங்க வர மாட்டிங்க, அதன் பார்க்க முடிவதில்லை. மற்றபடி எல்லாம் சரியா நடக்கிறது. வெயில் கடுமையா இருக்கிது இல்லை?

 

கண்ணன் : ஜீலை மாசம், அப்படித்தான் இருக்கும்.

 

(பேருந்து Havelock ரோட்டில் உள்ள River view Hotel முன் நிற்கிறது. சில ஜப்பானியப் பெண்கள் பேருந்தில் ஏறுகிறார்கள். அவர்கள் பாலாவை வணங்கி “முசு முசு “ என்று கூறி பேருந்தின் உள்ளே செல்கிறார்கள்.)

 

கண்ணன் : என்ன பாலா, ஆறு ஜப்பானியப் பெண்களும் பணமோ, transit link cardஒ தட்டாமல் போகிறார்களே?

 

பாலா : இது எப்பவும் நடப்பது தான் . நீங்க நடப்பதை வேடிக்கை பாருங்கள்

கண்ணன் :உங்க companyல ஒன்னும் செல்ல மாட்டார்களா?

பாலா : சார், உங்களுக்கு ஒள்று தெரியாது என்று நினைக்கிறேன். ஜப்பானியர்கள் ஏமாற்ற மாட்டார்கள். Dhoby Ghuatல் இறங்குவார்கள். அப்போது கவனிங்க.

 

(பேருந்து ஓடிக்கொண்டிருக்கிறது)

 

கண்ணன் : ஜப்பானியர்கள் பணிவன்பு மிக்கவர்கள் என்று தெரியும். இது புதுசா இருக்கே!

 

(Dhoby Ghuat பேருந்து நிறுத்துமிடம் வந்தது. ஜப்பானியப் பெண் ஒருவர் பாலாவிடம் வந்து வணங்கி அந்த ஆறு பேருக்கான பேருந்துக் கட்டணத்தை பணம் போடும் இடத்தில் போட்டார். ஆறு பேருந்து ரசீதுகளை பெற்று “அரிகாத்தோ” என்று கூறிச் சேன்று விட்டார்கள்.)

 

கண்ணன் : ஏன்ன ஆச்சிரியம் !

 

பாலா : ஜப்பானில் பயணம் முடிந்தவுடன் தான் பணம் கட்டுவார்கள். அவ்வளவு நேர்மை, நம்பிக்கை. நாங்கள் பேருந்து ஓட்டுநாராக பயிற்சி எடுக்கும்போதே எங்கள் ஆசரியார்கள் இது பற்றி கூறினார்கள். மேலும் பணம் செலுத்தவில்லை என்றால் பரவாயில்லை, நாட்டுக்கு புதியவர்கள் மகிழ்ந்து இலவச பேருந்து பயணம் மேற்போண்டு நம் நாட்டினை சுற்றிப் பார்க்கட்டுமே, என் செலவாக இருக்கட்டுமே.

 

கண்ணன் : புல்லரித்து விட்டது பாலா ! நீர் வாழ்க! நீர் புகழ் ஒங்குக!

 

பாலா : பெரிய வார்த்தை பேசாதீங்க மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும். அதோட மட்டுமல்ல. நம் நாட்டை பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் தோன்ஙி மற்றவர்களிடம் பரிமாறப்படும்.

 

(பேருந்து தேக்கா சந்தை வந்து சேர்ந்தது, கண்ணன் இறங்கவேண்டிய இடம்.)

கண்ணன் : மகிழ்ச்சி பாலா, சந்திப்போம் !

 

பாலா : நல்லபடியா போய் வாங்க சார்.

 

Advertisements