சிந்துவது சிவப்பு

அவள் சேலை சிவப்பு நிறம்

குடும்பத்தின் தேவைகளோ அவளது பாரம்

அவள் சிந்தியது கண்ணீர்

கன்ணீரை உண்டாகியவன் சிந்தியதோ, மது

 

அவள் குடும்பத்திற்கு கொடுத்தால் கடும் உழைப்பு

அவனோ கொடுத்தான் படும் வேதனை

போதையில் அடித்தான், துன்புறுத்தினான்

அவள் சிந்தியதுறக்கும் மேல், சிந்த வைத்தான், அவளின் செங்குருதியை

 

மாறவேண்டும், மாற்றவேண்டும்

வலியிலிருந்து மீள வேண்டும்

மாற்றினால் கணவனின் சட்டையை

அவளது சேலை நிறம் சிவப்பாக

 

 

செலவு

என் அம்மாவுக்கு உடை

என் அக்காவுக்கு நகை

என் தங்கைக்கு வீணை

என் தம்பிக்கு கணிணி

செலவுக்கு நான்

தந்தையில்லாத மூத்த மகன்!

 

ஆண்டவன்

எம்.எஸ்.விஸ்வநாதன்,

நீ

ஆண்டவன் !

இன்னிசை உலகை

ஆண்டவன் !

 

கைம்மாறு

கைமாறு என்று

கை மாறுகின்றன

மேசைக்கு கீழ்

நோட்டு கட்டுகள்!

 

 

ஆத்திரமும் அன்பும்

அவனோ

ஆத்திரத்தில்

அடித்து

ஆளாக்கினான்

அவளைப்

பெருங்காயத்திற்கு

 

அவளோ

அடிக்கும்போது

அவனுக்கு

ஏற்பட்ட

மூச்சுப்பிடுப்பு

நீங்க

கொடுத்தாள்

மருந்தாகப்

பெருங்காயத்தை

நீரில் கலந்து

 

கூந்தல்

எழிலாய் பின்னிய திருமணக் -கூந்தல்

ஏழ்மையில் சிக்கிய விதவையின் -கூந்தல்

 

உதிரத்தால் சடையிட்ட ஒருத்தியின் -கூந்தல்

நர்மனம் இருக்குமோ தேடிய ஒரு -கூந்தல்

 

ஆண்னாய் அவதிப்படும் வெட்டிய -கூந்தல்

பெண்னாய் உருமாற்றிப் போத்திய -கூந்தல்

 

டான்க் ரோட்டில் காணிக்கையாய் இன்னொரு -கூந்தல்

புற்று நோயின் வீரர்கள்ளுக்கு மற்றோருதரின் -கூந்தல்

Advertisements